பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

ஆட்டப்பலகையினை மாற்றலாம். இல்லையேல் அந்தப் பலகையில்தான் ஆடி முடிக்க வேண்டும்.

அவ்வாறு மாற்றக்கூடிய நிலை ஏற்பட்டாலும், முறை. ஆட்டம் (Board) நடந்து கொண்டிருக்கும் பொழுது நடுவில்

மாற்றக்கூடாது. அந்த முறை ஆட்டம் முடிந்த பிறகே ஆட்டப் பலகை மாற்றப்பட வேண்டும்.

எந்த ஆட்டப் பலகையையும் குறித்து, அதன் திறம், தரம், அதனை சுமக்கும் தாங்கி மற்றும் காய்கள் உட்பட, பரிசோதித்துத் தகுதியுடையவைதான் என்று அறுதியிட்டுக் கூறுகின்ற பூரண அதிகாரம் நடுவருக்கு உண்டு.

ஆட்டத்தில் உள்ள காய்களில் ஏதாவது ஒன்று உடைந்திருந்தாலும்கூட, அந்த , மூளிக் காயைப் பற்றி நடுவரிடந்தான் கூற வேண்டும். அது மாற்றப்பட வேண்டிய காய்தான் என்ருல், அதனை உடனே மாற்றி அது இருந்த சரியான இடம்பார்த்து நடுவர்தான் வைப்பர்.

ஆட்டத்தில், தன் ஆடும் வாய்ப்பின் பொழுது, சுண்டி அடித்த அடிப்பான் காயிலே மோதி, ஆட்டப்பலகையை விட்டு வெளியே விழுந்து விட்டால், ஆடுதற்குரிய மறு வாய்ப்பை அந்த ஆட்டக்காரர் இழக்கிறர். அதே சமயத்தில். எதிராளி காய் மட்டும் பைக்குள் விழுந்திருந்தால், அவருக்கு ஆடும் வாய்ப்பு இல்லை. -

தன் காயையோ அல்லது சிவப்புக் காயையோ விதிகளுக்குட்பட்ட வாறு, அந்த அடியில் பைக்குள் விழச் செய்திருந்தால், மீண்டும் அவருக்கு ஆடும் வாய்ப்பு உண்டு.