பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

அடிப்பான் தான் வெளியே விழும் என்பதில்லை. அ4பட்டக்காய்களும் அடிக்கடி வெளியே தூக்கி எறியப் படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. அவற்றை வைக்கின்ற முறையையும் காண்போம்.

அடிபட்ட வேகத்தில் சிவப்புக் காய் மட்டும் வெளியே விழுந்தால், சிவப்புக் காயினை எடுத்து, மத்தியில் உள்ள மைய சிவப்பு வட்டத்தில் சரியாக வைக்கவேண்டும் சிவப்பு வட்டத்தில் வேறு ஏதாவது காய்கள் ஏற்கனவே இடத்தை அடைத்துக் கொண்டிருந்தால், அவைகளை நகர்த்திவிட்டுத்தான் வைக்க வேண்டும் என்பதில்லை. சிவப்பு வட்டத்தில் அதிக அளவு தொடுவதுபோல, அல்லது குறைந்த அளவாவது படுவதுபோல சிவப்புக் காயை வைத்தால் போதுமானது.

வெள்ளைக் காய், கறுப்புக் காய் வெளியே போய் விழுந்தால், சிவப்பு வட்டத்தில்தான் வைக்கவேண்டும். இடம் இல்லாவிட்டால், சிவப்புக் காய்க்குக் கூறிய முறைகள் அனைத்தும் இதற்கும் பொருந்தும். சிவப்பு வட்டத்தின ஒட்டித் தொட்டுக்கொண்டிருப்பதுபோல், வைக்க வேண்டும்.

ஒரே சமயத்தில், வெள்ளைக்காய், கறுப்புக்காய், சிவப்புக்காய், வெளியே போய் விழுந்தால், சிவப்புக் காய்க்கே முதலிட்ம் கொடுக்கவேண்டும். சிவப்புக் காய்க்கு சிவப்பு வட்டத்தில் பூரண இடம் தந்து வைக்கவேண்டும். பிறகு, வெள்ளைக்காய் யாருக்கு உரிய்தோ அவருக்கு எதிராக இருப்பதுபோல, உள் வட்டத்திற்குள்ளே சிவப்புக் காயை ஒட்டி வைக்க வேண்டும். இந்தப் பணியை நடுவரே. செய்வார். கறுப்புக் காயையும் அதன் உரிமையாளருக்கு எதிரே இருப்பதுபோல்தான் வைக்கவேண்டும். *