பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

விட்டு, அந்த இடத்தில், அடிப்பான் மேல் இருந்த காயை. வைக்க வேண்டும். அவ்வாறு வைக்கும்பொழுது. பைக்குள்ளேயே விழுகின்ற அளவில், சமநிலையில்லாமல் பையுள்ளே தான் காய்விழும் தன்மையில் இருந்தால், அந்தக் காய் அல்லது காய்கள் பைக்குள் விழுந்ததாகவே கருதப்படும்.

அதே போல், காய்களின்மேல் அடிப்பான் இருக்கும் பொழுது, வெள்8ள கறுப்பு | சிவப்புக் காய்களை அகற்றிகுல், எல்லாக் காய்களுடனும் அடிப்பானும் பைக்குள் விழுந்து விடுகிற தன்மையில் பையோரப்பகுதியில் சாய்ந்தவண்ணம் , இருந்தால், அவை எல்லாம் பைக்குள் விழுந்ததாகவே கருதப்படும்.

அடிப்பானின் சமநிலை மட்டும் இழந்துபோய், பைக்குள் விழுந்து விடுகின்ற வாய்ப்புள்ளதாக அமைந்து, மற்ற காய். கள் பைக்குள் விழாதவண்ணம் இருந்தால், அதாவது அடிப்பானின் ஆதரவுடன் நின்ருல்கூட, அடிப்பான் மட்டுமே பைக்குள் விழுந்ததாகக் கருதப்பட்டு, அதற்குரிய தண்டனையை விதிக்கேற்றவாறு நடுவர் அளிப்பார்.

சில சமயங்களில் காய் அல்லது காய்கள் பைக்குள் வத்து விழுவது போல தொங்கிக்கொண்டிருக்கும். எங்கேயாவது அடிப்பான ஒருவர் வேகமாக அடித்தாலும், அந்த அதிர்ச்சியில் அந்தக் காய் அல்லது காய்கள் பைக்குள் விழுந்து விடும். அவ்வாறு விழுந்தால் முறைப்படி பைக்குள் -விழுந்தாகவே கருதப்படுகிறது,

o காய்களை ஒழுங்குற வைக்கும் பழகத்தைக் கவனத்துடன் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் விதிமுறைகளின் வழியே இயங்குவதுமாகும்.