பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழுங்கற்ற செயலும், தண்டனையும்

ஆட்டத்தில் பங்கு பெறுவது ஆனந்தம் பெறவும், ஆற்றலை வெளிப்படுத்தவும், அன்புடன் ஒருவருக்கொருவர். பழகிக் கொள்ளவும்தான் என்பதை அனைவரும் அறிவர். எல்லோருக்கும் ஒத்த கருத்துக்களையே "விதிகள்’ என்ற. வடிவத்தில் ஆட்ட வல்லுநர்கள் ஆக்கித்தந்திருக்கின்ருர்கள்

- ஆட்டத்தில் ஆர்வமுள்ள அனைவரும் அக்கறையுடன் விதிகளைக் கற்றுணர்ந்து, அதன் வழி இயன்ற வரை நடக்க வேண்டியதே, நல்ல உரிமையை நயந்து பெறுகின்றநல்லவர்களின் கடமையாகும். புரிந்து கொள்வது ஒருவழி. நடந்து கொள்வது வேறு வழி என்ருல் அது நல்ல ஆட்ட மாகாது. அது பேயாட்டமாகத்தான் மாறிவிடும்.