பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

காரியங்களைச் செய்தேனும், எதிராளியின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சிகளைச் செய்யவே கூடாது, ஈடுபடவும் கூடாது.

அதே போல், எதிராளி தனது ஆடும் வாய்ப்பை முடித்து, தனது அடிப்பான எடுப்பதற்குள் ஒரு ஆட்டக்காரர் தனது ஆட்டத்தைத் தொடங்கக்கூடாது. தொடர்ந்து இந்த விதிகளை மீறில்ை, நடுவர் அதற்குரிய தண்டனையை வழங்கி விடுவார். i

தனக்குரிய முதன் முதலாக வரும் 'ஆடும் لهrنيو مهت تق" பெறுவதற்கு முன், முன்னர் கூறியுள்ள விதிகளில் ஏதாவது ஒன்றை ஒருவர் மீறி நடந்து கொண்டால், அது 'தனி fough #5 oup" (Technical Foul) என்று குறிக்கப்படும். அதற்குத் தண்டனையாக, அவருக்குரிய உரிமைக்காய் ஒன்றை எடுத்துத் தண்டனைக் காயாக வைக்கப்படும், அதல்ை அவர் தனது ஆடும் வாய்ப்பை இழக்கத் தேவையில்லை. வாய்ப்பு வரும் பொழுது, தொடர்ந்து ஆடலாம்.

ஆட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் பொழுது தனக்கு ஆடும் வாய்ப்பு வருவதற்கு முன், ஏதாவது தவறிழைத்தால், இதனையும் முன் போலேவே. தனி நிலைத் தவறெனக் குறிக்கப்பட்டு, தண்டனைக்காய் ஒன்றை வைக்குமாறு செய்து, நடுவர் ஆணையிட்டு ஆடும் வாய்ப்பைத் தொடரச் செய்வார்.

ஆட்டம் தொடங்கிய பிறகு, தொடர்ந்து முன் செய்த தவறினைத் திரும்பவும் செய்தால், தண்டனைக் காய்" ஒன்றை நடுவர் வைக்குமாறு ஆணேயிட்டு, சில