பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SO

சமயங்களில், ஆடும் வாய்ப்பையும் நிராகரிக்கவும் செய்து நடுவர் தன் முடிவினைக் கூறி விடுவார்.

தவறிழைத்தவாறு எத்தனைக் காய்களைப் போட்டாலும் சிவப்புக் காய்கள் உட்பட, அத்தனையையும் எடுத்து ஆட்டப் பலகையில் வைத்து, அதற்கான தண்டனேக்காய் ஒன்றையும் எடுத்து வைத்து, ஆடும் வாய்ப்பையும் இழக்கச் செய்கிருர் நடுவர்.

மேலே கூறியவைகள் தவறுகள்தான். இனி குற்றங்கள் எனப்படும் ஒழுங்கற்ற செயல்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

போட்டி ஆட்டம் நடந்துகொண்டிருக்கும்பொழுது,

நடைமுறைக்கு ஒவ்வாத இழிந்த, ஒழுங்கற்ற சொற்களைப் பயன்படுத்துகின்றவர்கள்;

ஆட்ட நேரத்தில் நடுவரின் ஆணையின்றி தன் இடத்தைவிட்டு, மீறி எழுந்து செல்கின்றவர்கள்:

கொடுத்திருக்கும் ஓய்வு நேரத்திற்கு மேலேயே ஒய்வு எடுத்கக் கொண்டு, ஆடுதற்கு வர மறுக்கின்றவர்கள்;

நடுவர், தலைமை நடுவர் இவர்களது முடிவின’ ஏற்றுக்கொள்ள மறுத்துப் பிடிவாதம் செய்கின்றவர்கள்.

நடுவரின் முடிவினைக் குறித்து, ஆட்ட நேரத்திலும் ஆட்டம் முடிந்த பிறகும், கேலியாகவும் குத்தலாகவும்: ன்ெட்லாகி இதிக் ப்டுத்தும் பேசுகின்றவர்கள்: