பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C -

மிக வேகமாக வளர்ந்து, மக்களைத் தன்னகத்தே கவர்ந்து, அன்னிய நாடுகளுக்கும் விரைந்தேகிக் கொண்டி ருக்கும் கேரம் ஆட்டம். இன்னும் மிகக்குறுகிய காலத்திற்குள், உலக நாடுகளுக்கிடையே நடக்கவிருக்கும் பெரும்போட்டி ஆட்டங்களுள் ஒன்ருகத் திகழ்ந்தாலும் அது உண்மையாக நடக்கக்கூடிய காரியமே தவிர, வெறும் மிகையான வாதமல்ல,

ஆட்டத்தில் உண்மையான ஆர்வமுள்ளவர்களுக்கும், அதிக ஈடுபாடு நிறைந்தவர்களுக்கும், ஆட்டத்தில் பெரும் புகழும் பெற்று விளங்க வேண்டும் என்று விரும்புகிறவர் களுக்கும், இனி கூறப்போகும் கருத்துக்கள், உற்ற நண்பர் களைப்போல உதவும். வழிகாட்டும். வமி நடக்கிச் செல்வ வனவாகவும் விளங்கும்.

ஆட்டத்தின் நோக்கமானது. தனக்கென்று உரிமை 'யாகின்ற ஆட்டக் காய்கள் ஒன்பதினயும். சிவப்புக் காயை 'யும் சேர்த்து, எதிராளி அவருக்குரிய ஆட்டக் காய்களைப் 'பலகைப் பைக்குள் போட்டு விடுவதற்கு முன்னர், தான் பலகைப் பைக்குள் விதி முறைகளுக்கேற்ப போட்டு விட

வேண்டும் என்பது தான்.

H -

முன்னரே போட்டுவிட வேண்டும் என்பதற்காக முரட்டுத் தனமாக, அடிப்பான வேகமாக கண்டி விடுவதேைலா, ஆத்திரப்பட்டு அவசரப்பட்டு அடித்தாடு வதகுலோ அல்லது உணர்ச்சி வசப்பட்டு விடுவதகுலோ,

காய்கள் போய் விழுந்து விடாது. இதனை அறிந்து கொண்டால் போதும்.

காய்களை இதமாகவும், பதமாகவும், அடிக்க வேண்டும். மெதுவாக சுண்டித் தள்ளி அடிப்பான்