பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இது, யாரும் எந்தக் காயையும் எந்த சமயத்திலும் ஆட லாம் என்று திறந்த மனப்பாங்குடன் கூடிய

விருப்பத்திற்கேற்ப ஆடும் ஆட்டமாகும்.

வீட்டில் வெறும் பொழுது போக்குக்காக ஆடுபவர்கள். மட்டுமே இந்த ஆட்ட முறையைப் பின்பற்றி ஆடுகின்ருர்கள் .

தள ஆட்டம் (Base Game) ; இது முன்னைய ஆட்ட முறையை விட, முற்றிலும் மாறுபட்ட ஆட்டமாகும். சற்று வளர்ச்சி பெற்ற ஆட்டமுறையாகும். --

இந்த ஆட்டத்தில், ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் தனித்தனியாக ஆடுவதற்காக உரிமை ஆட்டக்காய்கள் ஒதுக்கித் தரப்படும். அவரவர்க்குரிய காய்களை ஆடிப் பைக்குள் போட்டால்தான் அவர் மீண்டும் ஆடலாம். எதிரிக்குரிய காயைப் போட்டால் அவருக்கும் பயனில்லை. அது எதிராளிக்குத் தான் சாதகமான பலனைக்கொடுத்தாகி விடும். இவ்வாறு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆட்டத்திற்கும் வெள்ளேக் காய் கறுப்புக்காய் என்று மாறிமாறியே வரும்.

கேரம் ஆட்டத்திற்கென்று முதலில் விளக்கியிருக்கின்ற அத்தனே விதிகளும் இந்த ஆட்டத்திற்குப் பொருந்தும். அத்துடன், இன்னும் ஒருசில கட்டுப்பாடுகளும் இதில்

யாருடைய காய் அல்லது காய்களாக இருந்தாலும் சரி, அம்புக்குறிகளில் (அதாவது தன்னுடைய தளக்கோட்டுக்கு அருகில் இடப்புறம் வலப்புறம் உள்ள இரு அம்புக் குறிகளில்). தளசிவப்பு வட்டங்களில் காய்கள் இவ்வாறு இருந்தால்,