பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

அந்தக் காய்களே அடித்தாடக் கூடாது. அவ்வாறு அடித் தாடுவது தவருகும். தவறுக்காகத் தண்டனைக்காயும். எடுத்து வைக்கப்படும். -

அடுத்து, ஆட்டத் தொடக்கத்திலிருந்து, ஒரே கையைத் தான், அதுவும் ஆடப்பயன்படுத்தும் கையில் உள்ள ஒரே விரலத்தான் எப்பொழுதும் மாமருமல் ஆட வேண்டும்.

அருகில் உள்ள அம்புக்குறிகளில் உள்ள காய்களே' அடித்தாடக் கூடாது என்பது போலவே, தளக்கோட்டிற்குப் {Base Line) பின்புறமாக இருக்கும் காய்களயும் அடித்தாடக் கூடாது. அதனை அடித்தாட வேண் டுமென்ருல் எதிரே உள்ள பலகைச் சட்டத்தில் அடிப்பானே அடித்து எதிர்த்து வரச்செய்து (Back Shot) வந்து காய்களே மோதிக் கலைத்து வெளிவருமாறு ஆடி விட வேண்டும்.

25 வருடத்திற்கு முன்னர் ஆடிய ஆட்டம் இது; இப்பொழுது இதை யாருமே ஆடுவதில்கல. வெறும் பொழுது போக்கிற்காகவே ஆடுகின்ருர்கள். முறையான போட்டி ஆட்டங்களில் தள ஆட்ட முறை இல்லை என்பதால் ஆட்டக் -காரர்கள், இத்தகைய ஆட்ட முறையை ஆடுவதால் எந்த விதமான பயனும் இல்லை. போட்டி ஆட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பெறவும் முடியாது.

சுதந்திர ஆட்டம் அல்லது பெரு விரல் ஆட்டம் : (Thumbing Game) : இது தன் விருப்பம் போலவே ஆடுகின்ற சுதந்திர ஆட்டம் என்ருலும், மிகவும் தந்திரமுள்ள ஆட்ட முறையாகும். -