பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

தான் (Back Shot). இதனைக் கையாளும் பொழுது, அடிக் கின்ற கோண (Angle) அளவின் அளவே பிரதிபலித்துத் திரும்புவதால், திரும்பி வந்து உரிய காயைத் தாக்கும்போது பைக்கும் காய்க்கும் ஒரு நேர்க் கோடாக வருவதுபோல அடித்தாட வேண்டும். ஆகவே, ஆழ்ந்த கவனமும், அதிக உழைப்பால் எழுந்த பயிற்சியுமே இந்தத் திறனை மிகுதியாக

வளர்க்கும். இடமறிந்து, காலமறிந்து இதனைப் பயன்படுத்த வேண்டும்.

அடித்தால், பைக்குள் சென்று விழுவதற்கு வாய்ப்பில்லை என்ற இடத்தினில் சிவப்புக் காய் இருந்தால், அதனை ஆடவே முயற்சி செய்யக் கூடாது. மீறி. ஆடுவதானது, எதிராளியை எளிதாக சிவப்பு காயைப் போடுவதற்கான வாய்ப்பை தானே அளித்தவராக ஆகி வெற்றி எண் கண இழக்கின்ற நிலக்குமல்லவா ஆளாக நேரிடும். ஆகவே தன்ல்ை போட முடியாது என்ருல் சிவப்புக் காயை விட்டு விட வேண்டும். அல்லது, எதிராளி எளிதாக ஆடமுடியாத சிக்கலான இடமாகப் பார்த்து, சிவப்புக் காயை நிறுத்தி வைத்துவிடுகின்ற அளவுக்கு ஆடிவிட வேண்டும்.

இல்லையேல். எதிராளியால் சிவப்புக் காயைப் போட முடியாத நிலை இருந்தால், சிவப்புக் காயை அவ்வாறே விட்டு வைத்து, நேரம் வரும்பொழுது ஆட முயலலாம்.

தவறுகளே முடிந்தவரை செய்யாமல், நிதானமாக ஆடிவிடவேண்டும். தனது ஆட்டக் காய்களை விரை வில் பைக்குள் போட்டு, தன் காய்களின் எண்ணிக் கையை குறைத்துக் கொள்வதில் மிகவும் முனைப்பாகவும் விழிப்பாகவும் இருந்து ஆடவேண்டும். :

தன் காய்களே ഥLAമേ பார்த்து ஆடிக்கொண்டிருப்பது நல்லதுதான் என்ருலும், எதிரியின் வேகத்தையும் قالوهيهيهيه