பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

பையும் குறைப்பது போலவும் ஆடவேண்டும். அது எப்படி யுென்ருல், எதிராளியின் காய்கள் எல்லாம் பைக்குள் எளிதாகப் போடக்கூடிய நிலையில் தனியாகவும் வசதியாக வும் இருந்தால், அவர் ஆட்டத்தை விரைவில் முடித்து, வெற்றி எண்கள் அதிகம் பெற்று விடுவாரல்லவா! அதனல் அவரது காய்கள் ஒன்றிரண்டை அடித்து, சிக்கலான இடத்தில் போட்டுவிட்டால் (Base) அவர் அதனே ஆடுவதற்காக மேற்கொள்ளும்பொழுது, ஆட்டத்தைத்தான் முடித்து விட ஏதுவான சூழ் நிலை அமையும். தடுத்தாடும் ஆட்டம் தருணத்தில், நிச்சயம் உதவும். எதிரியின் .திறமையைக் குறைக்கும். -

இயன்றவரை ஒவ்வொரு காயாக ஆடி, பைக்குள் போடுவதுபோல ஆடுவதுதான் நல்லது. ஒரே ஆடும் வாய்ப்பில், பல காய்கள அடித்துப் பைக்குள் போட்டு விடுவதுபோல, இரட்டை யோசனேயும் இரட்டை நோக்கமும் (Double idea) கொண்டு ஆடினல், எப்பொழுதாவது வெற்றியைத் தருமே தவிர, எப்பொழுதும் பலிக்காது. பயனளிக்காது. சிக்கலான சமயங்களில் இரட்டை யோசனை பலிக்கலாம். ஆலுைம், ஒன்றைக் குறி பார்த்து, ஒன்றின்மேல் விழி வைத்து நிறுத்தி, ஆடுவதே சிறந்த ஆட்டமாகும்.

கூர்ந்த மதியும், குறிப்புள்ள விழியும், ஆழ்ந்த ஆர்வமும், அச்சமிலா விரல் அசைவும், அருமையான ஆட்டத்தை நல்கும் என்பதால், ஆட்டக்காரர்கள் பற்றினைப் பெருக்கி, பயிற்சியில் திறனே மெருகேற்றி ஆடினல், அனைவரும் மகிழலாம். அரும் புகழுடன் திகழலாம். காண்பவர்களும் களிப்புறலாம்.

ஒரே இடத்தில் நெடுநேரம் அமர்ந்திருக்கச் செய்வதுடன், 'க் கட்டுப்பாட்டையும் அளித்து, மனதை ஒரு நிலைப்