பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

திருமங்கலம்.

வண்டி திருமங்கலத்திலிருந்து புறப்பட்டபோது அவர் கள் ஜன்னலோரம் எதிர்க்கெதிர் உட்கார்ந்திருந்தவர்களின் இரு பெஞ்சிகளும் சொல்லிவைத்தாற் போல் காலி யாயின. அந்த இடமே கூபே போல் தனித்து விட்டது. அதுவே இந்த நாளில் ஒரு ஆச்சரியம் தான்.

“ஸாமியோடு ஞான் ஸம்ஸாரிக்கணும்.'

கிழவர் பார்வை அவளைச் சிந்தித்தது. அவர் கண் களில் சுபாவமாக ஒரு ஏளனம் ஒளிந்து விளையாடும். அதே சமயத்தில், உதடுகளின் செதுக்கலில் கீழுதடு ஒரு இம்மி பிதுங்கி-குரூரம் மிளிர்ந்தது.

14

மீண்டும் கேரளத்தில் எங்கோ...

இவள் பட்டணத்தில் ஒன்று இரண்டு வார்த்தைகள் நல்ல தமிழே பேசிவிட்டு, என்னோடு ஸம்ஸாரிக்கையில் மட்டும் ஏன் மலையாளம் கூடுகிறது? நடிப்பா? திடீரென மீறி வயது காட்டும் தோற்றம். தலையின் தும்பை கரைக்கும் இயற்கையாகவே வெளிறிட்ட நிறத்துடன் ரத்தம் வேறு சுண்டிப் போய், முகத்தில் தினுசான ஸெலுலாயிடு பளபளப்புக்கும், மெலிந்து சுருக்கம் விழுந்து நீண்ட விரல்களுக்கும் உறைபோல் தொடங்கிய வெள்ளை ஜிப்பா, வேட்டிக்கும் அவர் ஏதோ ஆவியுலகத்திலிருந்து அந்தத் தடத்தினர் அவரை பூமிக்குத் தள்ளி விட்டாற் போல் தோன்றிற்று.