பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111

கினைத்துக் கொண்ட கவசம் வெறும் துத்துகாகத் தகடி லும் மோசம் என்று கிரூபித்து விட்டாய். போனால் போகிறாள். ஆனால், அவளுக்காக மனம் இப்பவும் இரங்கு கிறது. வெட்கக்கேடு அவள், மேல் உடல்கூட லேசாய்ச் சபலிக்கிறது. ஆனால், அங்கே திரும்புவதா?

அவளை இங்கே வரவழைத்துக் கொள்ளலாமா? அவளே வரேன்னு தானே சொன்னாள்!

அவளுக்கு இங்கு சிரமம்தான். அவளுக்கு பொழுது போக்குக்கு இங்கு வழியில்லை. கருணாகரனிடம் வசூலுக்குப் போகும்போது அவளையும் கூடவே அழைத்துக் கொண்டு ஒருநாள் அரைகாள் திருவனந்த புரத்தில் அறையெடுத்துக் கொள்ள வேண்டியதுதான். இரண்டாம் தேனிலவு. மற்றபடி கித்தியப்படி அவளுக்கு கஷ்டம்தான். நத்தை நத்தையா இந்தப் புழுங்கலரிசிச் சோறும், ஆள்வள்ளியும், கேந்திரம் பழமும் காசை வீசி எறிந்தால் இந்த நாளில் கிடைக்காத பொருள் உண்டா என்று எதிர் சவால் விடலாம். ஆனால், யார் எறியறா? பொறுக்க நான் காத்திருக்கேன். போதாதுக்குப் பிள்ளை கள் அனுப்பலாம். அவர்கள் கடமைதானே! இந்த நாளில் துரத்துப் பச்சைக்குத்தான் அவர்களும் நானும் சரி.

ஏன், இந்த சீமையில்தான் சிறையிருக்கணும்னு கட்டா யமா? இன்னும் கொஞ்சக்கிட்ட திருச்சி, தஞ்சாவூர் மாயவரம், திருவையாறு.காவிரிப்பாய்ச்சலின் வாழைக் கொல்லை; தென்னஞ்சோலை நடுவில் செல்லமா ஒடுங்கிக் கிடக்கும் குக்கிராமங்கள் எத்தனை இல்லை. சத்தமும் சந்தடியும் எனக்குத்தான் ஆகாது. ஆனால் அவளுக்காக விட்டுக் கொடுக்க வேணடியதுதான். விம்பு பிடிக்கும் வயசா எனக்கு இனிமேல் இதை எங்கேயோ ஏற்கெனவே கேட்ட மாதிரியிருக்கே!