பக்கம்:கேள்வி நேரம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98


பால: சரியான விடை. அது இரண்டரை மீட்டர் உயரம் இருக்கும். எடையும் ஏறத்தாழ 130 கிலோ கிராம் இருக்கும்... தாஜ்மஹாலைப் பற்றி உங்களுக்கெல்லாம் தெரியும். அதைக் கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகள் ஆயின. என்பது தெரியுமா?

மூவரும் (மெளனம்).

பால: என்ன, யாருக்குமே தெரியாதா? சரி, நானே சொல்லிவிடுகிறேன். 21 ஆண்டுகள் ஆயின. 1632ல் ஆரம்பித்தது...நவரத்தினங் கள் என்கிறோமே, அவைகளின் பெயர்களைக் கூற முடியுமா?

பத்ம: வைரம், நீலம், மாணிக்கம், புஷ்பராகம்... அப்புறம்...அப்புறம்.

இராஜ : ம ர க த ம், கோமேதகம், முத்து, வைடுரியம்.

பால: ஆக மொத்தம் எட்டுத்தானே சொன்னிர் கள்? இன்னொன்று...?

சுப்பிர: பவளம்.

பால : உம், மூவரும் சேர்ந்து கூறிவிட்டீர்கள். பம்பாய் மாநிலத்தில் பிறந்த பெரிய தேசத் தலைவர் ஒருவர் கணபதி விழா, சிவாஜிநாள் போன்ற விழாக்களை மிகுந்த ஆர்வத்துடன் நடத்தி வந்தார். அவர் யார் என்று தெரியுமா?

எல்லாரும் ; (மெளனம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/100&oldid=484679" இலிருந்து மீள்விக்கப்பட்டது