பக்கம்:கேள்வி நேரம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100


பால: ஆமாம், அந்த மூன்றும்தான்.பூட்ஸ் போல வடிவம் உள்ள ஒரு நாடு இருக்கிறது. அது எந்த நாடு?

பத்ம: இத்தாலி .

பால: பத்மஜா, சரியாகச் சொல்லிவிட்டாய்.

கத்தியின்றி ரத்தமின்றி

யுத்தம் ஒன்று வருகுது'

என்று தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?

சுப்பிர: நாமக்கல் கவிஞர்.

பால: சரி, அவருடைய முழுப் பெயர்?

சுப்பிர : நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை.

பால: அதுவும் சரி. இப்போது கோடைக் காலம். எல்லாப் பெட்டிக் கடைகளிலும் சோடாக் கலர்களாக இருக்கின்றன. இந்தச் சோடா பானத்தை முதல் முதலில் தயாரித்தவர் யார், தெரியுமா?

இராஜ: ஐசக் நியூட்டன்

பால: இல்லை. பத்மஜா, சுப்பிரமணியம், உங்களால் கூற முடியுமா?

பத்ம, சுப்பிர : தெரியவில்லையே!

பால: சரி, நானே சொல்லிவிடுகிறேன். ஜோசப் பிரீஸ்ட்லி என்ற இங்கிலாந்துக்காரர்தான் முதன் முதலில் சோடா பானத்தைத் தயாரித்தவர்...முதல் முதலில் மோட்டார் கார்களைப் பெரும் அளவிலும், குறைந்த செலவிலும் தயாரித்தவர் யார்?

பத்ம : ஹென்றி ஃபோர்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/102&oldid=484681" இலிருந்து மீள்விக்கப்பட்டது