பக்கம்:கேள்வி நேரம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105


பத்ம : காரைக்காலம்மையார், மங்கையர்க்கரசியார்.

பால : இன்னும் ஒருவர் உண்டு. அவர் பெயர் இசை ஞானியார்...கடைசியாக ஒரு கேள்வி. சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒர் எழுத்தாளர் ஒரு கதை எழுதியிருந்தார். அதில் ஒரு பகுதியைக் கூறுகிறேன் :

‘தீபாவளிக்கு முதல் நாள் இரவு, செல்வம் மொட்டை மாடியில் நின்று கம்பி மத்தாப்புக் கொளுத்தினான். அதைப் பார்த்து அவன் தம்பி சேகரும், தங்கை கல்யாணியும் துள்ளிக் குதித்து மகிழ்ந்தார்கள். அப்போது வானத்திலேயிருந்த பூரணச் சந்திரனும் அந்தக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தது.' இதில் ஒரு தவறு இருக்கிறது. அது என்ன தவறு ?

இராஜ : தீபாவளி சமயத்திலே அமாவாசையாகத் தானே இருக்கும்? அப்போது சந்திரனைப் பார்க்க முடியுமா? அ து வு ம் பூரணச் சந்திரனை...?

எல்லாரும் : முடியாது, முடியாது. (சேர்ந்து சிரிக்கிறார்கள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/107&oldid=484686" இலிருந்து மீள்விக்கப்பட்டது