பக்கம்:கேள்வி நேரம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108


ராஜேஸ்வரி : எந்த மாநிலத்திலும் இல்லை, அதுவே ஒரு மாநிலமாகத்தான் இருக்கிறது.

சூடாமணி: சரியான விடை முன்பு அது பஞ்சாபின் ஒரு பகுதியாக இருந்தது. 1912ல் தனி மாநிலமாக அமைக்கப்பட்டது. இப்போது அது மத்திய அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்தில் இருக்கிறது. ஐரோப் பாவின் பால் பண்ணை’ என்று எந்த நாட்டை அழைக்கிறார்கள்?

குமார் : டென்மார்க் நாட்டை.

சூடாமணி: ஆம். அங்கே தாது வளம் மிகக் குறைவு. ஆனாலும் நிலமும் நீரும் நிறைய உண்டு. கூட்டுறவு முறையில் பால் பண்ணைகளைத் துவக்கி நிறையப் பால், வெண்ணெய், பாலடைக் கட்டிகளை ஏற்றுமதி செய்கிறார்கள்..இந்தியாவில் முதல் முதலாகக் கிரிக்கெட் போட்டிப் பந்தயம் நடந்தது எந்த ஆண்டு என்று தெரியுமா?

எல்லோரும் : (மெளனம்)

சூடாமணி : 1907ஆம் ஆண்டு. அதில் ஆங்கிலேயர்கள், பார்சிகள், இந்துக்கள் மூவரும் சேர்ந்து ஆடினார்கள்...'குகன்' என்ற பெயர் யாரைக் குறிக்கிறது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/110&oldid=484688" இலிருந்து மீள்விக்கப்பட்டது