பக்கம்:கேள்வி நேரம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118


பதமா : கப்பல் ஒட்டிய தமிழர் சிதம்பரனார் பிறந்த அதே மாதத்தில், அதே தேதியில், நம் நாட்டு ஜனாதிபதியாக இருந்த ஒருவரும் பிறந்தார். அவர் யார்?

பமீலா : ராஜேந்திர பிரசாத்,

பத்மா இல்லை: ராஜேந்திர பிரசாத் பிறந்தது டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி, இவர்கள் பிறந்தது செப்டம்பர் 5-ஆம் தேதி, ஒரு குறிப்பு தருகிறேன்... அவரும் தென்னிந்தியர்தான்!

வரதராஜன்: சஞ்சீவிரெட்டி.

பத்மா : அவரும் இல்லை.

பிரபாகரன் : ம்...... ம்...... தெரிந்து வி ட் ட து. டாக்டர் ராதாகிருஷ்ணன். அவரது பிறந்த நாளைத்தானே ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம்!

பத்மா : சரியாகச் சொல்லி விட்டாய்... கர்நாடக மாநிலத்திற்கு முன்பு என்ன பெயர் இருந்தது.

வரத: மைசூர் மாநிலம்.

பத்மா : ரொம்ப சரி. 1973-ல்தான் கர்நாடகம் என்று பெயர் மாற்றப்பட்டது. பாலே நடனம்' என்று சொல்கிறார்களே. அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/120&oldid=484698" இலிருந்து மீள்விக்கப்பட்டது