பக்கம்:கேள்வி நேரம்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11


பொன் : இல்லை.

ராஜேஷ் : அமெரிக்காவில்

பொன் . அதுசரி, அமெரிக்காவில் எந்த நகரத்தில்...?

ராஜேஷ் : நியூயார்க் நகரத்தில்.

பொன்: சரியாகச் சொன்னாய், நியூயார்க்கில் கிரான்ட் சென்ட்ரல் டெர்மினல்’ என்ற ரயில்வே ஸ்டேஷனில் 47 பிளாட்டாரங்கள், 67 ரயில்வே தடங்கள் இருக்கின்றன. பரப்பளவு 48 ஏக்கர்!... திருக்கொடுங்குன்றம்’ என்ற ஊர்ப் பெயரை உங்களில் யாராவது கேள்விப்பட்டதுண்டா?

பழனி: நான் கேள்விப்பட்டிருக்கிறேன். பிரான் மலைக்கு அப்படி ஒரு பெயர் உண்டாம்.

பொன்: அடே, சரியாகச் சொல்லிவிட்டாயே! அங்குள்ள முருகனை அருணகிரிநாதர் பாடியிருக்கிறார். மிளகாயை நம் நாட்டில் பரப்பியவர்கள் யார்?

ராஜேஷ் : ஆங்கிலேயர்.

ராஜாத்தி : இல்லை. போர்த்துகீசியர்கள் தான்

பொன்: சரியான பதில். மிளகாய் வருவதற்கு முன்பு, நம் நாட்டில் மிளகைத்தான் பயன்படுத்தி வந்தார்கள்... டில்லியில் நடந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/13&oldid=494366" இலிருந்து மீள்விக்கப்பட்டது