பக்கம்:கேள்வி நேரம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18


யாழினி: தட்டு.

உமா: இல்ல

கனகசபை: பேனா

உமா: இல்லை.

விஜி : நான் சொல்றேன்.

உமா : விஜி, நீ இந்தக் கேள்விக்கு இரண்டாம் தடவையாய்ப் பதில் சொல்கிறாய். இப்பவா வது சரியாச் சொல்லு.

விஜி: இதோ சரியான பதில், டேபிள் கடுவே -B தான் இருக்கும். TABLE என்ற ஐந்தெழுத்துக்கு நடுவிலே இருப்பது B' தானே!

உமா : கரெக்ட். விஜி சரியாச் சொல்லிட்டாள். அடுத்ததாக ஒரு கேள்வி. ஆகாயத்திலே பிறைச் சந்திரன் தெரியுது. பார்த்தவுடனே அது வளர் பிறையா, தேய்பிறையா என்று எப்படிக் கண்டுபிடிப்பீங்க?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/20&oldid=484606" இலிருந்து மீள்விக்கப்பட்டது