பக்கம்:கேள்வி நேரம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20


யாழினி: தெரியும்; தெரியும். பதினொரு இடை வெளிகள். ஒரு இடைவெளிக்கு 6 விநாடின்னா 11 இடைவெளிகளுக்கு 11 x 6 = 66 விநாடிகள்.

உமா: ஆம், சரியான விடை 66 விநாடிகள்தான்! இப்போது வேறொரு விதமான கேள்வி. ஒரு மேஜை மேல் ஒரு தட்டு இருந்தது. அந்தத் தட்டிலே 10 ஆரஞ்சுப் பழங்கள் இருந்தன. மேஜையைச் சுற்றி 10 குழந்தைகள் நின்றார்கள். அவர்கள் ஆளுக்கு ஒரு பழமாக எடுத்துக் கொண்டார்கள். அப்படியும் தட்டிலே ஒரு பழம் இருந்தது.

யாழினி: அது எப்படி இருக்க முடியும் ?

உமா : இருந்தது.

கனகசபை : நான் சொல்கிறேன். கடைசிக் குழந்தை, தனக்குச் சேரவேண்டிய பழத்தைத் தட்டோடு எடுத்துக் கொண்டது.

உமா : ரொம்ப சரி. இன்னொரு சுலபமான கணக்கு 4 மீட்டர் அகலம், 4 மீட்டர் நீளம், 4 மீட்டர் ஆழம் உள்ள குழியிலே எவ்வளவு மண் இருக்கும்?

விஜி ; இதோ சொல்றேன். 4 x 4 x 4... யாழினி ஏனக்கா, அந்தக் குழியிலே எவ்வளவு மண் இருக்கும்னுதானே கேட்டீங்க, மண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/22&oldid=484608" இலிருந்து மீள்விக்கப்பட்டது