பக்கம்:கேள்வி நேரம்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21


இருந்தால் அதை எப்படிக் குழின்னு கூற முடியும் ?

உமா : யாழினி, உண்மையிலேயே நீ கெட்டிக் காரிதான். இன்னொரு கேள்வி. நல்ல கோடைக் காலம், இரவு நேரம். மழை இல்லை. அந்த நேரத்தில் தூரத்திலே ஒரு ரயில் போகுது. அது பாசஞ்சர் ரயிலா, கூட்ஸ் ரயிலான்னு எப்படிக் கண்டு பிடிப்பீங்க?

யாழினி : மூசு மூசுன்னு திணறினால், அது கூட்ஸ் ரயில். சத்தம் குறைச்சலா யிருந்தால் பாசஞ்சர் ரயில்.

உமா: . இதைவிடச் சுலபமா ஒரு வழி இருக்கு

விஜி : எனக்குத் தெரியும்; எனக்குத் தெரியும்.

உமா : விஜி, தெரிந்தால் சொல்லேன்.

விஜி : கோடைக் காலம்; மழையும் இல்லை; இரவு நேரம், அதனாலே ஜனங்கள் போகிற வண்டியாயிருந்தால், ஒவ்வொரு பெட்டியிலும் ஜன்னல் திறந்திருக்கும். வரிசையாக வெளிச்சம் தெரியும். கூட்ஸ் ரயிலாயிருந்தால் அதிக வெளிச்சம் தெரியாது.

உமா : விஜி, நீ உண்மையிலே புத்திசாலிதான். மகாகவி பாரதியாரின் முதல் புத்தகம் எது தெரியுமா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/23&oldid=494066" இலிருந்து மீள்விக்கப்பட்டது