பக்கம்:கேள்வி நேரம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26


அடை காக்கும் பெட்டியில் வைத்தாலும் 21 நாட்கள்தான்! அடுத்து ஒரு கேள்வி. உலகிலேயே மிகப் பெரிய சமுத்திரம் எது?

யாழினி: பசிபிக் மகா சமுத்திரம்.

உமா : அடே, யாழினி, நீ சரியாய்ச் சொல்லிட்டியே! இப்போதுதான் பள்ளிக்கூடத் திலே இந்தப் பாடம் நடக்குதோ?

யாழினி: இல்லை, இல்லை. இதை நான் இரண்டு வருஷத்துக்கு முன்னாலே படிச்சிருக்கேன்.

உமா: உன் ஞாபக சக்தி வாழ்க! இப்போது நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தாளும் பென்சிலும் தருவேன்.

ஒரு பூசணிக்காய்

ஒரு சாத்துக்குடி

இரண்டு வெண்டைக்காய்கள்

ஒரு புடலங்காய்

ஆறு கொத்தவரங்காய்கள்

இவற்றை வைத்து ஒரு படம் வரையனும். ஒரு பூனை முதுகுப் பக்கத்தைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பது போல அந்தப் படம் இருக்கனும், எங்கே, வரைஞ்சு பாருங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/28&oldid=484614" இலிருந்து மீள்விக்கப்பட்டது