பக்கம்:கேள்வி நேரம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28


உமா: இல்லை. பிரேஸில், சிலி, பெரு-இந்த மூன்று நாடுகளிலே ஒன்று.

விஜி ; சிலி

உமா : சரியான விடை. நூறு ஆண்டுகளுக்கு முன்பு நம் தமிழ் நாட்டில் சிலேட்டு கிடையாது. அப்படியானால் எதிலே எழுதிப் பழகியிருப்பார்கள் ?

யாழினி : மணலில்தான் எழுதிப் பழகியிருப் பார்கள்.

உமா : சரி, புத்தகம் கிடையாது. எதைப் பார்த்துப் படித்திருப்பார்கள் ?

கனகசபை: ஏட்டைப் பார்த்துப் படித்திருப் பார்கள்.

உமா : அதுவும் சரி. விஜி, அக்காலத்தில் பென்சில், பேனா கிடையாது. எதனால் எழுதியிருப்பார்கள் ?

விஜி : எழுத்தாணியால்.

உமா: ஆளுக்கு ஒரு விடை கூறிவிட்டீர்கள். சரி, கண்ணன் எங்கள் கண்ணனாம்; கார்மேக வண்ணனாம், என்ற பாட்டை இயற்றியவர் யார், தெரியுமா ?

கனகசபை: அது ஒரு நாடோடிப் பாடல். அதனால் பெயர் தெரியவில்லை.

யாழினி : கனகசபை சொன்னது தப்பு. எனக்குத் தெரியும், எங்கள் பள்ளி விழாவில் நானே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/30&oldid=484616" இலிருந்து மீள்விக்கப்பட்டது