பக்கம்:கேள்வி நேரம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32


சரளா : தேசபக்தர் திருப்பூர்க் குமரன் பிறந்த ஊர் எது?

பிரீதி: அவர் பெயருக்கு முன்னால்தான் ஊர் இருக்கிறதே! திருப்பூர்தான்.

சரளா: இல்லை. திருப்பூரில் அவர் கொடி பிடித்துச் சென்றபோது, அடிபட்டு உயிர்த் தியாகம் செய்ததால், திருப்பூர்க் குமரன் என்கிறார்கள். ஆனால், அவர் பிறந்த ஊர் வேறு.

கிரி: எனக்குத் தெரியும். அவர் பிறந்தது... பிறந்தது, என்னவோ ஒரு மலை. தலைமலை...இல்லை, இல்லை. தலைக்கு இன்னொரு பெயர் சொல்வார்களே,...ம் நினைவு வந்து விட்டது: சென்னிமலை, அவர் பிறந்தது சென்னிமலை என்ற ஊரில் தான்.

சரளா : அப்பா! எப்படியோ சரியாகச் சொல்லி விட்டாய். சரி, பாரத ரத்னா’ எந்த ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது?

பிரின்ஸ் : 1954-ஆம் ஆண்டிலிருந்து.

சரளா: சரியான விடை முதல் ஆண்டிலே யார் யாருக்குப் ’பாரத ரத்னா’ விருது வழங்கினார்கள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/34&oldid=484619" இலிருந்து மீள்விக்கப்பட்டது