பக்கம்:கேள்வி நேரம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33


பிரின்ஸ்: ராஜாஜிக்கு  சரளா : அவர் ஒருவருக்குத்தானா? இன்னும் இருவருக்கும் வழங்கப்பட்டதே, அவர்களின் பெயர்கள் தெரியுமா?

கிரி : டாக்டர் ராதாகிருஷ்ணன்.

சரளா : அதுவும் சரி, இன்னொருவர் நோபல் பரிசு பெற்றவர்...என்ன, இன்னுமா தெரிய வில்லை?

பிரிதி : தெரியும், தெரியும். சர்.சி.வி. ராமன்.

சரளா ! எப்படியோ மூன்று பேரும் ஆளுக்கு, ஒரு தலைவர் பெயரைச் சொல்லிவிட்டீர்கள். இந்தியாவிலே முதன் முதலாகத் தயாரிக்கப் பட்ட செயற்கைக் கிரகம் எது?

பிரின்ஸ் : ஆரியபட்டா.

சரளா கரெக்ட். இலங்கையிலே ஒர் ஆறு. இருக்கிறது. அது கங்கை என்ற பெயருடன் முடியும். அதன் முழுப் பெயர் தெரியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/35&oldid=484620" இலிருந்து மீள்விக்கப்பட்டது