பக்கம்:கேள்வி நேரம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34


எல்லோரும் : (மெளனம்).

சரளா : ஒருவருக்கும் தெரியவில்லையா? சரி, நானே சொல்லிவிடுகிறேன். அதன் பெயர் மகாவலி கங்கை. இப்போது நான் ஒரு விடுகதை போடப் போகிறேன்.

கால் உண்டு; நடக்கமாட்டான்.

கை உண்டு, மடக்க மாட்டான்.

முதுகு உண்டு; வளைக்க மாட்டான். அவன் யார்?

கிரி: சட்டை. சரளா : சட்டைக்குக் கால் உண்டா? பிரீதி : நான் சொல்கிறேன். நாற்காலி!

சரளா: பிரிதி சரியாகச் சொல்லிவிட்டாள். சோவியத் ரஷ்யாவின் தந்தை என்று போற்றப்படுகிறவர் லெனின் என்பது உங்களுக்குத் தெரியும். அவருக்கு அவருடைய பெற்றோர் இட்ட பெயர் தெரியுமா?

கிரி : எனக்குத் தெரியும். முந்தாம் நாள்தான் லெனினின் இளமைப் பருவம்' என்ற புத்தகத்தைப் படித்தேன். விளாடிமிர் இலீயச் உலியனாவ்.

சரளா : அடேயப்பா! நன்றாக இவ்வளவு நீளப் பெயரை நினைவு வைத்திருக்கிறாயே! ஜைன மதம், சமண மதம் இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/36&oldid=484621" இலிருந்து மீள்விக்கப்பட்டது