பக்கம்:கேள்வி நேரம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42


சிவம் : அன்புள்ள முத்துக்குமார், தங்கமாரி, ஜோதி, சிங்கம் ஒரு தடவையில் எத்தனை குட்டிகள் போடும்? உங்களுக்குத் தெரியுமா?

ஜோதி : ஒன்றே ஒன்று.

சிவம் : இல்லை.

ஜோதி : சிங்கம் ஒரு குட்டி, பன்றி பல குட்டி என்று ஒரு பழமொழிகூட இருக்கிறதே, அண்ணா!

சிவம் : அந்தப் பழமொழி தவறு. ஒரே ஈற்றில் சிங்கம் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் கூடப் போடும். மிருகக் காட்சி சாலையில் இருக்கும் சிங்கம் நான்கு ஐந்து குட்டிகள் கூடப் போடும். உணவு தேடி அலையாமல் எந்த விதமான ஆபத்தும் இல்லாமல் இருக்கிறதல்லவா அது? அதனால் அது அதிகக் குட்டி களைப் போடுகிறது.

சிவம் : நீங்கள் சர்க்கஸ் என்றால் ஆவலாகப் பார்க்கிறீர்கள். முதன் முதலாக சர்க்கஸ் காட்சிகளை நடத்தியவர்கள் யார் தெரியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/44&oldid=484628" இலிருந்து மீள்விக்கப்பட்டது