பக்கம்:கேள்வி நேரம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43


முத்து : ஆங்கிலேயர்.

சிவம் இல்லை.

தங்கம் : கிரேக்கர்கள்.

சிவம் : அவர்களும் இல்லை. ஜோதி! உனக்குத் தெரியுமா?

ஜோதி: தெரியவில்லையே அண்ணா.

சிவம்: ரோமானியர்கள்தான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சர்க்கஸ் காட்சிகளை நடத்தினார்கள். அப்போது நாம் இப்போது பார்ப்பது போல் பல்வேறு வித்தைகள் இல்லை. மல்யுத்தமும் குதிரை மேல் ஏறிச் சவாரி செய்யும் வித்தைகளுமே நடை பெற்றன. பிறகு, இங்கிலாந்தில் சர்க்கஸ் பரவியது. நம் நாட்டில் கழைக்கூத்தாடிகள் தெருக்களில் பல வித்தைகளைச் செய்து காட்டி வந்தார்கள். ஆனாலும், ஆங்கிலேயர் நம் நாட்டுக்கு வந்த பிறகுதான் நம் நாட்டிலும் சர்க்கஸ் ந்டத்த ஆரம்பித்தார்கள். இப்போது நால்வரைப் பற்றி ஒரு கேள்வி.

முத்து நம் நால்வரைப் பற்றியா?

சிவம் : இல்லை, இல்லை. சைவசமய ஆசார்யர்கள் நால்வர் என்கிறார்களே. அவர்கள் யார், யார் என்று தெரியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/45&oldid=484629" இலிருந்து மீள்விக்கப்பட்டது