பக்கம்:கேள்வி நேரம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48


ஜோதி: இரண்டும் ஒன்றுதான். அது ஆஸ்திரேலியாக் கண்டம்தான்.

சிவம் : வெரி குட் சரியாகச் சொன்னாய்...... தென்னிந்தியாவில் ஒரு பெரிய தெப்பக்குளம் இருக்கிறது. அது எங்கே என்று தெரியுமா?

முத்து: வேலூரில்.

சிவம் : இல்லை.

தங்கம் : மதுரையில்.

சிவம் : தங்கமாரி சொன்னதுதான் சரி. 17ஆம் நூற்றாண்டில் திருமலை நாயக்க மன்னர் மதுரையிலே திருமலை மஹால் என்னும் ஒரு பெரிய அரண்மனை கட்டுவதற்கு மண் தோண்டச் செய்தார். மண் தோண்டிய இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. அவர் அதைத் தெப்பக்குளமாக மாற்றிவிட்டார்.

இப்போது சாலை விதிகளைப் பற்றி ஒரு கேள்வி. வலது புறம் திரும்பக் கூடாது என்பதற்குப் பலகையில் எப்படிப் படம் போட்டிருக்கிறார்கள்? வரைந்து காட்ட முடியுமா?

முத்து : சைக்கிளில் போகும்போது அடிக்கடி பார்ப்பேன். ஆனால் வரைந்து காட்டத் தெரியாதே!

சிவம் : இதோ நான் வரைந்து காட்டுகிறேன். நீ பார்த்தது சரிதானா, சொல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/50&oldid=484634" இலிருந்து மீள்விக்கப்பட்டது