பக்கம்:கேள்வி நேரம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54


இரத்தின குமாரி: ஒரே ஆண்டில், ஒரே மாதத்தில் ஒரே தேதியில் இரண்டு இந்தியப் பெரியார்கள் பிறந்தார்கள். அவர்கள் யார், யார் தெரியுமா ?

ரவி : காங்தித் தாத்தாவும், ல்ால்பகதூர் சாஸ்திரியும்.

இரத்தின: இல்லை. இருவரும் ஒரே மாதத்தில் ஒரே தேதியில்-அதாவது அக்டோபர் இரண்டாம் தேதி பிறந்தார்களே தவிர, ஒரே ஆண்டில் பிறக்கவில்லை.

உ.ம்...தெரியவில்லையா ? அவர்களில் ஒருவர் பெரிய கவிஞர்; இன்னொருவர் நேரு மாமாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

விஜி : எனக்குத் தெரியும். ரவீந்திரகாத தாகூர்; இந்திரா காந்தி.

இரத்தின: விஜி சொன்னதில் முதல் பெயர் சரிதான். இரண்டாவது பெயர் தவறு.

சதீஷ் : கேரு மாமாவின் அப்பா பண்டித மோதிலால் நேருதானே ? இரத்தின : அவரே தான் ! தாகூரும் பண்டித மோதிலாலும் 6-5-1861ல் பிறந்தார்கள். ...வேகமாக நடக்கும் போட்டியைப் பார்த்திருப்பீர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/56&oldid=484639" இலிருந்து மீள்விக்கப்பட்டது