பக்கம்:கேள்வி நேரம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59


இரத்தின : அகிம்சை என்றவுடனே காந்தித் தாத்தா நினைவு வராமல் இருக்குமா? அதனால்தான் விஜி சரியாகச் சொல்லி விட்டாள்...... UNESCO என்கிறோமே, அந்த நிறுவனத்தின் முழுப் பெயர் என்ன?

சதீஷ் : United Nations Educational, Scientific and Cultural Organisation.

இரத்தின : ரொம்ப சரி. அதை ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான பண்பாட்டுக் கழகம் என்று தமிழில் கூறலாம்... ஆமாம், அதன் தலைமை அலுவலகம் எங்கே இருக்கிறது?

சதீஷ் : லண்டனில்.

ரவி: இல்லை, பாரிசில்.

இரத்தின : ரவி சொன்னதே சரி. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், ஆகிய மூவரும் சிவபெருமானைப் பற்றிப் பாடிய நூலின் பெயர் என்ன?

சதீஷ் : தேவாரம்.

இரத்தின: சரியான பதில்...நம் பாரத நாடு விடுதலை பெற்றபோது மைசூர், பரோடா, திருவாங்கூர், புதுக்கோட்டை என்று பல சுதேச சமஸ்தானங்கள் இருந்தன. அப்படி மொத்தம் எத்தனை சமஸ்தானங்கள் இருந்தன என்று கூற முடியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/61&oldid=484644" இலிருந்து மீள்விக்கப்பட்டது