பக்கம்:கேள்வி நேரம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62


ரவி : சென்னை, டில்லி, பம்பாய்.

இரத்தின: . ரவி சொன்ன பதிலில் முதலும் கடைசியும் சரியே. ஆனால் நடுவே சொன்னது தான் தவறு

சதீஷ் : நான் சரியாகச் சொல்கிறேன். கல்கத்தா.

இரத்தின: கரெக்ட்! டெலிபோனைக் கண்டு பிடித்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் எந்த நாட்டில் பிறந்தவர்?

விஜி : எடின்பரோவில்,

இரத்தின : எடின்பரோ என்பது அவர் பிறந்த நகரம். ஆனால், எங்த நாட்டில் அவர் பிறந்தார் என்றல்லவா கேட்டேன்? எடின்பரோ எந்த நாட்டின் தலைநகரம்?

விஜி ; ஸ்காட்லாந்து காட்டின் தலைநகரம்

இரத்தின : விஜி சொன்ன விடை சரியே... கடைசியாக ஒரு கேள்வி. 4 கிலோ மீட்டர் துரத்தைக் கடக்க ரவிக்கு ஒரு மணி நேரமாகிறது. ரவி, சதீஷ் இருவரும் சேர்ந்து அதே துாரத்தைக் கடக்க எவ்வளவு நேரமாகும்:

சதீஷ் : அதே நேரம்தான். அதாவது ஒரு மணி! இரத்தின .நீ சொன்னது சரியே. ஆனாலும், இரு நண்பர்கள் பேசிக்கொண்டே நடக்கும் போது ஒரு மணி நேரம் ஆனதாகத் தெரியாது. அதைவிடக் குறைந்த நேரமே ஆனதுபோல் தோன்றும், இல்லையா?

மூவரும் : ஆமாம்! ஆமாம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/64&oldid=484647" இலிருந்து மீள்விக்கப்பட்டது