பக்கம்:கேள்வி நேரம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64


திலகவதி : சில பறவைகளால் பறக்க முடியாது. ஆனாலும், வேகமாக ஒடும். பறக்க முடியாமலும், வேகமாக ஒட முடியாமலும, உளளது ஒரு பறவை. அதன் பெயர் தெரியுமா?

கவிதா : நெருப்புக் கோழி.

திலக: இல்லை. நல்ல குளிர்ப் பிரதேசத்தில் அது வசிக்கிறது.

ரங்ககாதன்: தெரியும், தெரியும். அதன் பெயர் பெங்குவின்

திலக: கரெக்ட். இப்போது நம் தேசத்தின் தலைநகராக டில்லி இருக்கிறது. இதற்கு முன்பு வேறொரு நகரம், நம் தேசத் தலைநகராக இருந்தது. அது எந்த நகரம்?

அமுதா : கல்கத்தா.

திலக ; அடே! அமுதா சரியாகச் சொல்லி விட்டாளே! சரி...கிரேட் பிரிட்டன் என்கிறார்களே, அப்படியென்றால் என்ன என்று தெரியுமா?

கவிதா: , இங்கிலாந்தைத்தான் கிரேட் பிரிட்டன் என்கிறோம்.

திலக : கவிதா, நீ சொன்னதில் மூன்றில் ஒரு பங்கு சரி. அதாவது இங்கிலாந்து கிரேட் பிரிட்டனில் ஒரு பகுதி. மற்றும் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. அவை என்ன? என்ன? .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/66&oldid=484648" இலிருந்து மீள்விக்கப்பட்டது