பக்கம்:கேள்வி நேரம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65


ராமச்சந்திரன் : ஸ்காட்லாந்து...இன்னொன்று. ம்...ம்... வேல்ஸ்.

திலக : ரொம்ப கரெக்ட், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் என்ற மூன்று பகுதிகளும் சேர்ந்ததுதான் கிரேட் பிரிட்டன்... தினமும் காலையில் எழுந்ததும் நாம் காப்பி சாப்பிடுகிறோம். இந்த காப்பி மிக அதிக மாக விளையக்கூடிய நாடு எது?

கவிதா : பிரேசில் நாடு.

திலக: ஆம், தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டில்தான் அதிகமாகக் காப்பி விளைகிறது...நேரு மாமாவை ஆங்கிலேயர்கள் எத்தனை தடவை சிறையில் அடைத்தார்கள், தெரியுமா?

ரங்கநாதன் : ஒன்பது தடவைகள்.

திலக: சரியான விடை நம்தேச விடுதலைக்காக நேரு மாமா சுமார் 13 ஆண்டுகள் சிறையில் இருந்தார். ஒரு முறை அவர் நீண்டகாலம்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/67&oldid=484649" இலிருந்து மீள்விக்கப்பட்டது