பக்கம்:கேள்வி நேரம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66


அதாவது 1045 நாட்கள் சேர்ந்தாற்போல் சிறைவாசம் செய்தார்!

கவிதா: அடேயப்பா கிட்டத்தட்ட மூணு வருஷம்.

திலக : ஆமாம். 3 வருஷத்துக்கு 50 நாட்கள் தான் குறைவு...நாலடியார் என்கிறார்களே, அப்படி என்றால் என்ன?

அமுதா: அது ஒரு புத்தகம். நாலு நாலு அடி களில் பாட்டு இருக்கும்.

திலக : அமுதா ஒரளவு சரியாகச் சொன்னாள். நான் இன்னும் சற்று தெளிவாகச் சொல்லுகிறேன். நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆன நூல் நாலடியார். அதில் 400 பாடல்கள் இருக்கின்றன. நாலடி" என்று பெயர் வைத்திருக்கலாம். ஆனாலும், அந்த நூலுக்குச் சிறப்புக் கொடுப்பதற்காக 'ஆர்' என்று கடைசியில் சேர்த்து * நாலடியார்' என்கின்றனர்......சாந்தி நிகேதனம்’ என்ற பெயரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மேற்கு வங்காளத்தில் இருக்கிறது. அதை ஏற்படுத்தியவர் யார்?

ராமச்சந்திரன் : ரவீந்திரகாத தாகூர்.

திலக இல்லை. அமுதா, கவிதா, ரங்ககாதா, உங்களுக்குத் தெரியுமா?

மூவரும் : (மெளனம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/68&oldid=484650" இலிருந்து மீள்விக்கப்பட்டது