பக்கம்:கேள்வி நேரம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68


ராமச்சந்திரன்: ஆறு கால்கள்.

திலக : ரொம்ப கரெக்ட். ஆனால் அந்த ஆறு கால்களும் மூன்று விதமாக இருக்கும். அதன் உடலின் முன் பாகத்தில் உள்ள இரண்டு கால்களும் சிறியவை. நடுப் பாகத்தில் உள்ள இரண்டும் சற்று நீளமானவை. உடலின் பின் பக்கத்தில் உள்ள இரண்டும் நீளமாகவும் பெரிதாகவும் இருக்கும். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு மூலமே எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கல்வி முறையை முதலில் வகுத்தவர் ஒரு பெண்மணி. அவர் பெயர் என்ன? அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

அமுதா: மான்டிசோரி அம்மையார். இங்கிலாந்தைச் சேர்ந்தவர்.

திலக: முதல் விடை சரிதான். இரண்டாவது விடை தவறு.

கவிதா : இங்கிலாந்து இல்லை; இத்தாலி.

திலக: கரெக்ட் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மான்டிசோரி அம்மையார்தான் அந்தக் கல்வி முறையை வகுத்தவர். அதனால்தான் அப்படிக் கற்றுக் கொடுக்கப்படும் பள்ளி களை மான்டிசோரி பள்ளி' என்கிறார்கள். பழனிக்குப் போயிருப்பீர்களே, அங்கு மலை ஏற எத்தனை படிகளைக் கடக்க வேண்டும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/70&oldid=484652" இலிருந்து மீள்விக்கப்பட்டது