பக்கம்:கேள்வி நேரம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70


திலக: இல்லை. பாக்கிஸ்தான் கொடியிலே பிறைச் சந்திரனும் ஒரு நட்சத்திரமும் இருக்கும். ஆனால், இதிலே நடுவிலே ஒரு பெரிய நட்சத்திரமும் அதைச் சுற்றி ஐந்து சிறிய நட்சத்திரங்களும் இருக்கின்றனவே!

அமுதா : சிறீலங்கா தேசிக் கொடியாக இருக்கும்.

திலக : அதுவும் இல்லை. சிறீலங்கா கொடியில் சிங்கம் இருக்கும்.

ரங்கநாதன் : பர்மா தேசக் கொடி.

திலக : ரங்ககாதன் சரியாகச் சொல்லிவிட்டான். நான் இப்போது ஒரு பாட்டிலே நாலு வரிகளைச் சொல்லப் போகிறேன் :

சின்னச் சின்ன எறும்பே,

சிங்காரச் சிற்றெறும்பே,

உன்னைப் போல நானுமே

உழைத்திடவே வேணுமே.

இதைப் பாடியவர் யார்?

கவிதா : கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை.

அமுதா: எனக்குத் தெரியும் சரியான விடை. முத்துக் குவியல்’னு ஒரு புத்தகம். அதிலே பல கவிஞர்களுடைய குழந்தைப் பாடல்களையெல்லாம் போன மாதம்தான் படித்தேன். அதிலே இந்தப் பாட்டும் இருக்கிறது. இதை எழுதியவர் நமச்சிவாய முதலியார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/72&oldid=484654" இலிருந்து மீள்விக்கப்பட்டது