பக்கம்:கேள்வி நேரம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77


கார்த்தி : டில்லி,

லிங்க : இல்லை. கல்கத்தா,

தேனி : இரண்டுமே தவறு

சசி ; பம்பாய்.

தேனி: பம்பாய் என்பது சரிதான். ஆனால், ஒவ்வொரு நகரமாகச் சொல்லிக்கொண்டே வருவது சரியில்லையே வெளிநாட்டு வர்த்தகத்திற்கு பம்பாய் மையமாக விளங்கு வதால், அதை இந்தியாவின் வாயில் என்று கூறினார்கள். பொருத்தம்தானே!... நேப்பாளத்தின் தேசியச் சின்னம் எது?

லிங்க : எருமை.

தேனி : இல்லை

கார்த்தி : மாடு

தேனி : இல்லை. சசி, உனக்குத் தெரியுமா...? சரி, நானே சொல்கிறேன். சிவபெருமானின் உருவம் பொறித்த முத்திரைதான் நேப்பாளத்தின் தேசியச் சின்னம்... திரு வி. க. இரண்டு கல்வி நிலையங்களில் ஆசிரியராக இருந்தார். இரண்டாவதாக இருந்தது சென்னை வெஸ்லி கல்லூரியில். முதலில் எந்தப் பள்ளியில் வேலை பார்த்தார், தெரியுமா?

எல்லாரும் : (மெளனம்)

தேனி : யாருக்குமே தெரியாதா? அவர் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/79&oldid=484660" இலிருந்து மீள்விக்கப்பட்டது