பக்கம்:கேள்வி நேரம்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6


பொன்ராசன்: பிள்ளைத் தமிழ் என்றால் என்ன, தெரியுமா?

ராஜேஷ்: ஒ. தெரியுமே! எங்களைப் போன்ற பிள்ளைகளுக்காக எழுதப்படும் தமிழ்தானே?

பொன்: இல்லை, இல்லை. வேறு யாருக்காவது தெரியுமா?

பழனிவேலு : 'பிள்ளைத் தமிழ்' என்றால் கடவுளைப் பிள்ளையாக வைத்துப் பாடியது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். 'மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்' என்பதுகூட அப்படிப்பட்டதுதானே?

பொன் : ஆமாம். கடவுளைப் பற்றி மட்டுமல்ல; தங்களுக்கு விருப்பமான அரசர்கள், தலைவர்களைப் பற்றிக்கூடக் கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள். 'கம்பன் பிள்ளைத் தமிழ்', 'காந்தி பிள்ளைத் தமிழ்' என்றெல்லாம் பல பிள்ளைத் தமிழ் நூல்கள் உண்டு. சரி, தமிழில் முதலாக வெளி வந்த நாவல் எது? அதை எழுதியவர் பெயர் என்ன?

ராஜேஷ் : பிரதாப முதலியார் எழுதிய வேத நாயகம் பிள்ளை சரித்திரம்.

கார்த்தியாயினி : ஐயையோ! ராஜேஷ் மாற்றிச் சொல்லிவிட்டானே! வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்பதுதானே சரியான விடை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/8&oldid=484696" இலிருந்து மீள்விக்கப்பட்டது