பக்கம்:கேள்வி நேரம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90


அலமேலு: ஆம், சரியான விடை சுத்தத் தங்கம் எத்தனை காரட் எடையுள்ளது?

ஜெயா : 24 காரட்.

அலமேலு : கரெக்ட். எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடித்து வெற்றிக்கொடி காட்டியவர்கள் டென்சிங்கும், ஹில்லரியும் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதற்குப் பிறகு, இருமுறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தவர் யார் என்று தெரியுமா?

எல்லாரும் (மெளனம்).

அலமேலு: ஒருவருக்கும் தெரியாதா நவாங் கொம்பா என்பவர் 1963, 1965 ஆகிய இரு ஆண்டுகளில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந் திருக்கிறார். அவரும் டென்சிங் இனத்தைச் சேர்ந்தவர்தான்......இதோ இந்தப் படத்தைப் பாருங்கள். இதில் இருப்பது என்ன என்று தெரிகிறதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/92&oldid=484672" இலிருந்து மீள்விக்கப்பட்டது