பக்கம்:கேள்வி நேரம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91


சரவணன்: ஓ, நன்றாகத் தெரிகிறதே, இதுதான் விசைக் காற்றாடி.

ஜெயா : ஐயையோ விசைக் காற்றாடி இப்படியா இருக்கும்? காற்றாடியிலே நீளநீளத் தகடு இருக்குமே!

கிரி : இது. ராடார் கருவி.

அலமேலு : கரெக்ட். ஒரு பொருளின் இருப்பிடத்தையும் தூரத்தையும், ரேடியோ அலைகளைக்கொண்டு அறிவதற்குப் பயன்படும் ராடார் கருவிதான் இது. முன்பெல்லாம் கோயில் கட்டடங்கள் செங்கற்களாலே கட்டப்பட்டிருக்கும். பிறகுதான் கருங்கற்களைக் கொண்டு கட்டினார்கள். முதல் முதலாகக் கருங்கற்களால் கட்டப்பட்ட கோயில் எது, தெரியுமா?

சரவணன் : அந்தக் கோயில் காஞ்சிபுரத்தில் இருக்கிறது. ஏகாம்பரநாதர் என்று நினைக்கிறேன்.

அலமேலு : காஞ்சிபுரம் என்பது சரியே. ஆனால். ஏகாம்பரநாதர் கோயில் என்பது தவறு.

ஜெயா: கைலாசநாதர் கோயில்.

அலமேலு: ஆம், கைலாசநாதர் கோயில்தான் முதன் முதலாக அமைக்கப்பட்ட கற்றளிக் கோயில். இந்திய அரசு அளிக்கின்ற விருது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/93&oldid=484673" இலிருந்து மீள்விக்கப்பட்டது