பக்கம்:கேள்வி நேரம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92


களில் மிகவும் உயர்ந்தது. பாரத ரத்னா. அடுத்த மூன்றைக் கூறுங்கள், பார்க்கலாம்.

கிரி: பத்மவிபூஷண், பத்மசிறீ, பத்மபூஷண்.

அலமேலு: சரிதான். ஆனாலும், இடம் மாறி இருக்கின்றன. பத்மவிபூஷண். அதற்கு அடுத்தது பத்மபூஷண், அதற்கும் அடுத்தது பத்மசிறீ... அந்தமான், நிகோபார் தீவுகள் என்கிறார்களே, அவற்றில் மொத்தம் எத்தனை தீவுகள் இருக்கின்றன?

ஜெயா: இரண்டு தீவுகள். ஒன்று அந்தமான்; இன்னொன்று நிகோபார்.

அலமேலு: தவறு, தவறு.

சரவணன்: ஒவ்வொன்றிலும் பல தீவுகள் இருக்கின்றன. எத்தனை எத்தனை என்று சரியாகத் தெரியாது.

அலமேலு: சரி, நானே சொல்லிவிடுகிறேன். அந்தமானில் 205 தீவுகள், நிகோபாரில் 19 தீவுகள். மொத்தம் ..

ஜெயா: 224 தீவுகள்.

அலமேலு: ஆம். இந்த 224 தீவுகளும் சேர்ந்ததுதான் அங்தமான், நிகோபார் தீவுகள். பெரு நகரம்-அதாவது மெட்ரோபாலிடன் சிட்டி என்கிறார்களே, எந்த மாதிரி நகரத்தை அப்படிச் சொல்லுகிறார்கள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/94&oldid=484674" இலிருந்து மீள்விக்கப்பட்டது