பக்கம்:கேள்வி நேரம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93


சரவணன்: 10 லட்சம் மக்களுக்கு மேல் இருந்தால் அந்த நகரத்தை மெட்ரோபாலிடன் சிட்டி என்கிறார்கள்.

அலமேலு : வெரிகுட் மிகவும் சரியாகச் சொன்னாய்...நம் தேசத்தில் ஐந்தாண்டுத் திட்டம் என்று ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கிறார்களே, இதை முதலில் துவக்கியது எந்த நாடு?

கிரி: அமெரிக்கா.

அலமேலு : இல்லை.

சரவணன் : ரஷ்யா.

அலமேலு : ஒஹோ! அமெரிக்கா இல்லை என்றால் ரஷ்யாவா? எப்படியோ சரியான விடையைச் சொல்லிவிட்டாய். ரஷ்யாவில் தான் 1928-ல் ஐந்தாண்டுத் திட்டம் துவங்கப் பெற்றது...சென்னை நகருக்கு வீராணம் என்ற ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு வர ஒரு திட்டம் இருந்தது. அந்த ஏரி எங்கே இருக்கிறது?

ஜெயா : சிதம்பரத்துக்குப் பக்கத்திலே.

அலமேலு : ஆம், தென் ஆர்க்காட்டில் சிதம்பரம் வட்டத்திலே இருக்கிறது. இந்த ஏரி கடலைப் போல நீளமாகவும், விரிவாகவும் இருக்கும். தமிழ் நாட்டிலேயே மிகப் பெரிய ஏரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/95&oldid=484675" இலிருந்து மீள்விக்கப்பட்டது