25
அவருக்கு, பேப்பர் தரவில்லையா?" என்று கேட்டார். இல்லை! என்றார்கள் அவர்கள். விதி இல்லையே—என்று கூறுவதாகவே அவர்களின் பேச்சு உணர்த்திற்று. அதைக் கேட்டு, துணைக்கமிஷனர், "செச்சே! என்னப்பா! இப்படியெல்லாமா நடந்துகொள்வது? பேப்பர் கொடுத்தால் என்ன? இவர் என்ன, கொள்ளை வழக்கில் ஈடுபட்டவரா! வம்புவல்லடியில் சிக்கினவரா!" என்றெல்லாம் பேசினாரா, என்றுதானே கேட்கத் தோன்றுகிறது? அப்படி ஒன்றும் அவர் கேட்கவில்லை. மேலதிகாரி கேள்வி கேட்டார்; உட்பட்ட அதிகாரிகள் பதில் அளித்தார்கள். ஒழுங்காக நடந்து கொண்டார்கள் என்ற திருப்தி அவருக்கு ஏற்பட்டது.
பேப்பர் கொடுக்கவில்லையா? என்று கேட்டாரே மேலதிகாரி, அந்த அரை விநாடி இதயம் பேசுகிறது; பிறகு, அதிகாரி ஆகிவிட்டார்.
வழியிலேதான் சொன்னார்; "உங்கள் சம்பந்தியை விடுதலை செய்துவிட்டோம்" என்று.
கமிஷனர் அலுவலகத்தில் நடைபெறவேண்டிய சட்டச் சடங்குகள் முடிந்து, என்னைச் சைதாப்பேட்டை சப்ஜெயிலில் கொண்டு போய்ச் சேர்த்தார்.
அங்க அடையாளங்கள், உடைமை இவைபற்றிய குறிப்புகள் எழுதிக்கொள்ளப்பட்டன; மூக்கின் மீது ஒரு மச்சம், இடதுகை தோள்பட்டைச் சமீபம் ஒரு மச்சம். வயது-55! உயரம்பற்றி விவாதம் வந்தது. சுவரிலேயே குறிபோட்டிருந்தார்கள்—5-3! என்று கணக்கு காட்டிற்று. இவ்வளவும், பொதுவாழ்க்கைத் துறையினர் சம்பந்தப் பட்ட வழக்குகளில் தேவைதானா?
அடையாறு போலீஸ் கொட்டடிக்கும், சைதைச் சிறைக்கும், என்வரையில் உடனடியாகக் கிடைத்த 'முன்னேற்றம்'—இரண்டு கம்பளிகள் சைதையில் தரப்பட்டன. ஒன்று விரிப்பு, மற்றொன்று போர்வை, அல்லது தலைக்கு! இதிலே என்ன சுகம் கண்டாய் அண்ணா! என்று கேட்கத்
கை.-2