29
தருமலிங்கமும், சண்முகமும், இப்படிப் பலர் இடம்பெறவில்லை. 'முதல் ரவுண்டு' என்பார்களே அதிலேயே 2000! கழகம் கலகலத்துவிட்டது, பொலபொலவென உதிர்ந்து கொண்டிருக்கிறது என்று ஓசை கிளப்பிக் கொண்டிருப்பவர்கள், திகைத்துப் போகக்கூடிய தொகை அல்லவா இது! திட்டமிட்டு நடத்தப்பட்ட அறப்போரில் ஈடுபட்ட மொத்தப் பேர்களின் எண்ணிக்கை அல்ல? சர்க்கார் பார்த்து, ஊருக்கு நாலு பேர்களையாவது பிடித்துப் பார்ப்போம். ஒரு பீதி ஏற்படுகிறதா பார்க்கலாம் என்ற முறையில் பிடித்தபோது, தொகை 2000 !!
எவ்வளவு வலிவு குறைந்த சர்க்காராக இருந்தாலும், எத்துணை வலிவுடன் நடத்தப்படும் கிளர்ச்சியையும் தடுத்துவிட முடியும்—முடிகிறது. இத்தகைய முறையில், கிளர்ச்சி நடத்தப்படும் என்று முன்கூட்டியே, அறிவித்து விட்டால், முன்கூட்டியே எவறவர் ஈடுபடுவார்கள் என்று தகவல் கிடைக்கிறதோ, எவறவர் ஈடுப்படக்கூடும் என்று யூகித்தறிய முடிகிறதோ, அவர்களை முன்கூட்டியே பிடித்து அடைத்துவிட்டால்; கிளர்ச்சி நடைபெறாதபடி பார்த்துக்கொள்ளலாம்—சர்க்கார் அதைத்தான் செய்கிறது. செய்வது மட்டுமல்ல, சர்க்காரை நடத்தும் பொறுப்பை மேற்கொண்டுள்ள கட்சியின் தலைவர்களிலே சிலர்—அறிவுக்கரசர்கள்—ஏளனம்கூடச் செய்கிறார்கள்; கிளர்ச்சி நடைபெறவில்லை!!—என்று
கிளர்ச்சி நடைபெற்றிருந்தால் எவ்வளவு பேர்களைப் பிடிக்கவேண்டி இருந்திருக்குமோ அதனைவிட அதிக எண்ணிக்கையுள்ளவர்களைப் பிடித்து அடைத்துவிட்டு, கிளர்ச்சி நடக்கவில்லை என்று பேசுவது, கேலிப் பேச்சிலே கூட, மிகமிக மட்டரகம்! ஆனால் என்ன செய்வது? மிக உயர்ந்த இடத்துக்குச் சென்ற பிறகு கூட, சிலருக்கு இத்தகைய மட்டரகப் பேச்சுத்தான் பேசமுடிகிறது! தங்கக் கலயத்திலே ஊற்றிவைத்தாலும், கள் பொங்கி வழிந்து நாற்றம் வீசத்தானே செய்யும்?
ஒருகட்சி நடத்தத் திட்டமிடும் கிளர்ச்சி, தோல்வியாகிவிட்டது என்று எப்போது கூறலாம் என்றால், அந்தக் கட்சி, கிளர்ச்சிக்கான திட்டத்தை அறிவித்து அழைக்கும்