39
நாங்கள் அதிகநேரம் பேசிக்கொண்டிருப்பதைத் தொல்லையாகக் கருதிவிடுவார்களோ என்பதுதான். மேலும், அரசியல் பிரச்சினைகளைப் பேசக்கூடாது; கழகத்திலே மேற்கொண்டு இன்னின்னது நடத்தப்பட வேண்டும் என்று சொல்லக் கூடாது; எதைப் பேசவேண்டுமோ, எதைப் பேசினால் சுவையும் பயனும் எங்களுக்கு ஏற்படுமோ அவைகளைப் பேசக்கூடாது! மாற்றப்பட முடியாத விதிமுறையல்லவா அது!! ஆக இரண்டொரு நிமிடங்களிலேயே பேச்சு முடிந்துவிடுகிறது.
எப்படி?
பரவாயில்லை.
தனியாகவா?
இல்லை; இரண்டு பேர் இருக்கிறார்கள்.
யார் அந்த இருவர்?
வேறு வழக்கிலே வந்தவர்கள்.
சாப்பாடு எப்படி?
பரவாயில்லை, குறையில்லை. அங்கேயே சமைக்கிறார்கள்.
ஏதாவது கொண்டு வரவா?
புத்தகங்கள் கொடுத்தனுப்புங்கள்.
நம்ம பத்திரிகைகள் வருகின்றனவா?
நம்ம பத்திரிகைகளா? கிடையாது. வராது.
மற்றப் பத்திரிகைகள் அனுப்பலாம்.
வீட்டுக்கு என்ன சேதி?
வந்திருந்தார்கள்! வரச்சொல்லுங்கள்.
இவ்வளவுதானே பேச முடிகிறது! இதையே பின்னிப்பின்னி எவ்வளவு பேச முடியும். ஆகவே விரைவாகவே அனுப்பிவிடுகிறேன். இங்கு முதல் முறையாக, பரிமளம் சரோஜாவுடன், ராணியையும் மகன் இளங்கோவனையும் அழைத்து வந்தபோதுகூட, அதிக நேரம் பேசிக்கொண்டிருக்க இயலவில்லை. இரண்டாவது முறையாக வந்தபோது,