63
திண்டிவனம் தோழர் தங்கவேலு எம்.எல்.ஏ. அன்பழகன் எம்.எல்.சி.மனோகரன் எம்.பி. ஆகியோரும் வந்திருந்தனர். சக்தியவாணியும், மவுண்ட்ரோடு குப்பம்மா அவர்களும் வந்திருந்தனர்.
7-ந்தேதி காலையில் என் நண்பர் வழக்கறிஞர்: நாராயணசாமி, சிறையில் என்னைச் சந்தித்து, அந்த அறிக்கைபற்றிக் கலந்து பேசுவது என்றும், 7-ம்தேதி பிற்பகல் 2-30-மணிக்கு வழக்குமன்றம் கூடும்போது அறிக்கையை ஒப்படைப்பது என்றும் ஏற்பாடுசெய்து கொண்டிருக்கிறோம். நாளைய தினம் நண்பர் நடராசன், என்னைக் காணவரக்கூடும் என்று எண்ணுகிறேன். இன்று வழக்கு மன்றத்தில், கே.ஆர். ராமசாமி சோகமே உருவாக வந்திருக்கக் கண்டேன். எனக்கு ஒரு சங்கடம் என்றால் மிகவும் சஞ்சலப்படும் சுபாவம் ராமசாமிக்கு—அத்தனை பாசம்! இத்தகைய தோழர்களின் அன்பினைப் பெற்றிருப்பதை ஒரு பேறு என்றே நான் கருதுகிறேன். உடல்நலக்குறைவாக இருந்த அப்துல்சமத் அவர்களும் இன்று வழக்குமன்றம் வந்திருந்தார். அ.பொ.அரசு, அவர்தான் ஓடோடிச் சென்று, உணவுக்கான ஏற்பாடுகளைக் கவனித்தார்.
நண்பர்களுக்கு ஒரு எண்ணம்—இயற்கையானது தான்—அண்ணனை எப்படியும் தண்டித்துவிடப்போகிறார்கள்— நல்ல சாப்பாடு எங்கே கிடைக்கப்போகிறது—இப்போதாவது சாப்பிடட்டும் என்ற எண்ணம். எதை எதையோ கொண்டுவந்து, எதிரில் குவித்தார் அரசு. பக்கத்தில் இருந்தவர்கள், பண்டங்களின் தரம், சுவை, பக்குவம் இவைபற்றி விளக்கிக்கொண்டிருந்தார்கள் நானோ, அவர்கள் காட்டிய அன்புத்தேனை உண்டு மயங்கிக் கிடந்தேன்.
வழக்குமன்ற நிகழ்ச்சிகளை இதழ்களிலே காண்பாய் என்பதால், அங்கு நடைபெற்றவை பற்றி அதிகமாக எழுதாது விடுகிறேன்.
தம்பி! இன்றிரவு வலி வலதுகரத்தைத் தாக்கிவிட்டது இனியும் இங்கே இருப்பது சரியல்ல என்பதைக்