72
இருந்தால், 'பரோல்' பெறுவது இயலுமோ அவர்களில் ஒருவருடனும் தொடர்புகொள்ளும் நிலையில் நான் இல்லை. நானோ கைதியாக இருக்கிறேன். இந்த நிலையில், வழக்கமாக உள்ள கூச்சத்தை உதறித் தள்ளிவிட்டு, பரிமளம் எனக்குப் 'பரோல்' கிடைக்க ஏற்பாடு செய்தது, உள்ளபடி என் வாழ்நாளில், நான் மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்று.
அமைச்சர் குறிப்பிட்ட அதிகாரியின் உத்திரவைப் பெற்றுவர, பரிமளம் சென்றான். நான் மருத்துவ மனையில் காத்துக் கிடந்தேன்—ஒவ்வொரு விநாடியும் பல மணி நேரமாக எனக்குத் தோன்றிற்று—மருத்துவர்கள் என் நிலையைப் பார்த்து, ஆபத்து ஒன்றும் இருக்காது பயம் வேண்டாம் என்று அன்புரை கூறினர்—என்மனம் ஒரு நிலை கொள்ளவில்லை! மணி ஆக ஆக என் மனம் குழம்பலாயிற்று.
அந்தச் சமயத்தில்தான் அமைச்சர் இராமய்யா அவர்கள் அங்கு வந்தார்—பார்த்து ரொம்ப நாளாயிற்று—உடம்பு சரி இல்லை என்றார்கள்—பார்க்க வந்தேன் என்று சொன்னார். அவர் பார்த்தாக வேண்டிய 'நோயாளி' எவரேனும் மருத்துவ மனையில் இருந்திருக்கக்கூடும்—அவரைப் பார்க்க வந்தவர், நானும் மருத்துவமனையில் இருப்பதால் என்னையும் பார்க்க வந்திருக்கிறார் என்று எண்ணிக்கொண்டேன்—ஒரு அமைச்சர் வந்து பார்த்து விசாரிக்க வேண்டிய நிலையில் உள்ள 'பிரமுகன்' அல்லவே நான். எப்படியோ ஒன்று, வந்ததற்கு நன்றி கூறத்தான் வேண்டும். மிக்க அன்புடன் பேசினார்—என் கரத்தில் உள்ள வலியின் தன்மைபற்றி விசாரித்தறிந்தார்—கொஞ்சமும் தூக்க முடியாதிருந்த நிலையிலிருந்து, ஓரளவு தூக்கக்கூடிய நிலைக்கு, என் இடது கரம் வந்திருப்பதைச் சொன்னேன்—இந்த அளவுக்குக் குணம் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியே என்று என் திருப்தியைத் தெரிவித்தேன்—அவரோ, அதெல்லாம் இல்லை—முழுக் குணம் ஏற்படவேண்டும்—அவசரம் வேண்டாம்—இருந்து குணப் படுத்திக்கொண்டு போங்கள் என்று கனிவுடன் பேசினார்—என் உடன் பிறந்தவர்போல் பேசுகிறாரே என்று