பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92


அவனைத் தவஞ் செய்யக் காட்டுக்கு அனுப்பினான்.[1]


பெருஞ்சேரலிரும் பொறைக்கு மக்கட் பேறில்லாமலிருந்து பிறகு இவனும் இவனுடைய அரசியும் நோன்பிருந்து விரதம் நோற்று வேள்வி செய்து ஒரு மகனைப் பெற்றார்கள் என்று 8-ஆம் பத்து 4-ஆம் செய்யுள் கூறுகிறது.[2] இதில், இவனுடைய மகன் பெயர் கூறப்படவில்லை. அவன் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை என்று கருதப்படுகிறான்,


தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை பதினேழு ஆண்டு அரசாண்டான் என்று 8-ஆம் பத்துப் பதிகக்குறிப்புக் கூறுகிறது. இவன் ஏறத்தாழ கி. பி. 137 முதல் 154 வரையில் அரசாண்டான் என்று கருதலாம். இவன், சேரன் செங்குட்டுவன் சேர நாட்டை யரசாண்ட காலத்தில் இருந்தவன். அவனுடைய தாயாதித் தமயன் முறையினன். இவன் காலத்தில் பாண்டி நாட்டை யரசாண்டவன் ஆரியப்படை கடந்த, அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவனுடைய ஆட்சிக் காலத்திலேயே பெருஞ்சேரலிரும் பொறை இறந்து போனான்.


  1. (முழுதுணர்ந்து ஒழுகும் நரை மூதாளனை. வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும், தெய்வமும் யாவதும் தவமுடையோர்க்கென, வேறுபாடு நனந்தலை பெயரக், கூறினை பெருமநின் படிமை யானே” (8 ஆம் பத்து 4:24-28) “நரைமூதாள னென்றது புரோகிதனை.” பழய உரை). தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும் பொறைக்குப் பசும்பூட் பொறையன் என்றும் (அகம் 308:4) பெரும்பூட் பொறையன் என்றும் குறும். 89:4) சிறப்புப் பெயர் உண்டு .
  2. ** ('சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும், காவற் கமைந்த அரசுதுறை போகிய, வீறுசால் புதல்வன் பெற்றனை' (8 ஆம் பத்து 19-21)